"தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்லூரிக்கு செல்லுங்கள்" - அண்ணா பல்கலை.துணை வேந்தர் வேல்ராஜ்..!
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள மற்றும் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் நிரந்தரமாக மூட பரிந்துரைக்கப்படும் என, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தபின் பேட்டியளித்த துணைவேந்தர், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கை குறைவாக உள்ள 150 கல்லூரிகளை, நிர்வாகத்தினர் தாங்களாகவே மூடிவிடுவது நல்லது என்றார்.
மேலும், தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வேறு கல்லூரிகளுக்கு செல்வதே, அவர்களது உயர்கல்விக்கு உகந்தது என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.
Comments